கோயம்புத்தூர்: சி.பி.எஸ்.இ பிளஸ் 1 உடற்கல்வி குறித்த பாடப்புத்தகத்தில் யோகா பாட்டி நாணம்மாள் குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
அதில் இந்தியாவின் முதுமையான யோகா ஆசிரியரான இவர், கோவையை சேர்ந்தவர் எனவும் 45 ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்களை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரிடம் படித்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது யோகா ஆசிரியராக பயிற்சி அளிக்கின்றனர்.
2016இல் மத்திய அரசின் 'நாரி சக்தி புரஸ்கார்' விருதும், 2018இல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். 2019இல் யோகா பாட்டி நாணம்மாள் காலமானார்.
இதையும் படிங்க: டெல்லியில் அமித் ஷா, அமரீந்தர் சிங் சந்திப்பு!