பொள்ளாச்சி பாலியல் வழக்கை, கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் சிபிஐ விசாரித்து வருகிறது. குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிகண்டன் ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்து பாலியல் துன்புறுத்தல் சம்பவ வீடியோ காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்க சிபிஐ அனுமதி கேட்டு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இன்று(டிச.3) இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்தது. இதற்காக குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சென்னை பரிசோதனை கூடம் வழங்கும் தேதியில் ஐந்து பேரையும் அழைத்து குரல் மாதிரியை பதியலாம்.
குரல் பதிவின் போது யாரையும் துன்புறுத்தக்கூடாது. சரியான நேரத்திற்கு அவர்களுக்கு உணவு வழங்கிவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.