கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ரொட்டிக் கடை, பாரமேட்டுப் பகுதியில் ஒரு ஏக்கர் மேல் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. வருவாய்த்துறைக்குச் சொந்தமான இவ்விடத்தில் அறியவகை பறவைகள், யானை, சிறுத்தை, கரடி, காட்டு மாடு, மான் உள்ளிட்டவை மேய்ச்சலுக்காக வந்து செல்கின்றன.
தற்போது இந்தப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தீ வைத்ததை அடுத்து, வனத்துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். மேலும் கடந்த ஒரு வாரமாக யானைக்கூட்டம் அப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாகவே அப்பகுதியில் தீ வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்