கோயம்புத்தூர்: கோவை - பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
கோவையில் இருந்து காலை 5:20 மணிக்குப் புறப்படும் இந்த முன்பதிவில்லா விரைவு ரயில் (06421) போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு காலை 6:25 மணிக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8:55 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (06422) கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு இரவு 10:15 மணிக்கு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று துவங்கப்பட்ட இந்த ரயில் நாளை (டிச.24) முதல் வாரத்தின் ஏழு நாட்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
Passengers adorn the decorated #Coimbatore-#Pollachi Passenger with smiles, selfies, and group photos, turning the journey into a festive celebration on rails. 📸🎉 #SouthernRailway pic.twitter.com/baaMMCdRei
— Southern Railway (@GMSRailway) December 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Passengers adorn the decorated #Coimbatore-#Pollachi Passenger with smiles, selfies, and group photos, turning the journey into a festive celebration on rails. 📸🎉 #SouthernRailway pic.twitter.com/baaMMCdRei
— Southern Railway (@GMSRailway) December 24, 2023Passengers adorn the decorated #Coimbatore-#Pollachi Passenger with smiles, selfies, and group photos, turning the journey into a festive celebration on rails. 📸🎉 #SouthernRailway pic.twitter.com/baaMMCdRei
— Southern Railway (@GMSRailway) December 24, 2023
இந்நிகழ்வில் சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்கா, உதவி மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், “கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கோவை - பொள்ளாச்சி அல்லது பொள்ளாச்சி வரையிலான மின் மயமாக்கப்பட்ட பிறகு ராமேஸ்வரம், தென்காசி ஆகிய ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது சேலம் கோட்டத்தில் கோவை, பொள்ளாச்சி இடையிலான இந்த ரயிலை இயக்குவது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அதனை வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார். மேலும், பொள்ளாச்சி முதல் மேட்டுப்பாளையம் வரை மெமோ ரயில் இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கின்ற நிலையில் அதனை ரயில்வே நிர்வாகம் கவனிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மங்களூர் - கோயம்புத்தூர் இன்டர்சிட்டி ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீடிக்கிறோம் என்று பியூஸ் கோயல் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது அறிவித்தார். ஆனால் இன்று வரை அது அமலாக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தார்.
-
Captivating moments on the tracks! 🚂✨
— Southern Railway (@GMSRailway) December 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Inaugural Run of 06421 / 06422 #Coimbatore - #Pollachi Passenger train through this glimpse video, revealing the picturesque charm of the #journey🌟🛤️ #SouthernRailway pic.twitter.com/03tbAVNNd4
">Captivating moments on the tracks! 🚂✨
— Southern Railway (@GMSRailway) December 24, 2023
Inaugural Run of 06421 / 06422 #Coimbatore - #Pollachi Passenger train through this glimpse video, revealing the picturesque charm of the #journey🌟🛤️ #SouthernRailway pic.twitter.com/03tbAVNNd4Captivating moments on the tracks! 🚂✨
— Southern Railway (@GMSRailway) December 24, 2023
Inaugural Run of 06421 / 06422 #Coimbatore - #Pollachi Passenger train through this glimpse video, revealing the picturesque charm of the #journey🌟🛤️ #SouthernRailway pic.twitter.com/03tbAVNNd4
கோவிட் தொற்றுக்குப் பிறகு பேசஞ்சர் ரயில் வேலை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றி உள்ளதையும், பத்து ரூபாய் இருந்த கட்டணத்தை 30 ரூபாயாக மாற்றி உள்ளதையும் சுட்டி காட்டிய அவர், ஆனால் அந்த ரயில்கள் தற்பொழுது சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்வதை குறிப்பிட்டார். எனவே அதனையும் ரயில்வே துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறி தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “இந்த ரயில் சேவை குறித்தான மனு, கடந்த நவம்பர் மாதம் அளிக்கப்பட்டதாகவும் உடனடியாக ரயில்வே துறை அமைச்சரிடம் இது குறித்து பேசி ஒரே மாதத்திற்குள் இந்த ரயில் இயக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்-க்கு கோவை மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக” கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் எல்.முருகன், பின்னர் வரும் வழியில் காரமடை பகுதியில் இளைஞர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.