கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் முதல்வர் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும், சட்டப்பேரவை தலைவருமான தனபால் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய சபாநாயகர் தனபால், “கோவை சத்தியமங்கலம் சாலை அன்னூர் வழியே செல்லும் போது சரவணம்பட்டி முதல் சத்தியமங்கலம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் சிக்கி பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
பொதுமக்களின் இந்த சிரமத்தை தவிர்க்க கோவை சரவணம்பட்டி முதல் மைசூர் வரை சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பைபாஸ் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு, நபார்டு வங்கி உதவியுடன் நிறைவேற்றப்படவுள்ளது எனத் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க...பெண்ணை தரக்குறைவாக பேசியதால் பேருந்து சிறைபிடிப்பு!