ETV Bharat / state

கோவையை காக்க வரும் மூன்றாவது கண்... - கோவையில் புறநகர்ப்பகுதியில் கண்காணிப்புக்கு சிசிடிவி கேமராக்கள்

குற்றங்களை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு முன் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் முன் வர வேண்டும் என கோவை எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

கோவையை காக்க வரும் மூன்றாவது கண்
கோவையை காக்க வரும் மூன்றாவது கண்
author img

By

Published : Jan 7, 2022, 12:47 PM IST

கோவை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை விரைவாகக் கண்டறிந்து கைது செய்வதிலும், குற்றங்களைத் தடுக்கும் வகையில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா பெரும் பங்கு வகிக்கின்றன.

கோவை மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாநகர் மற்றும் புற நகரக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், உப்புத்தோட்டம், பட்டரை பேருந்து நிலையம் உள்ளிட்ட 27 பகுதிகளில் 100 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து அன்னூர் காவல் நிலையத்தில் இந்த 100 கண்காணிப்பு கேமராக்களை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை எஸ்பி செல்வநாகரத்தினம் பேட்டி
கோவை எஸ்பி செல்வநாகரத்தினம் பேட்டி

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், "குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும், நீதிமன்றத்தில் சாட்சியாக அளிக்கவும், சிசிடிவி கேமரா பேருதவியாக உள்ளது எனவும், அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் கூட கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

கோவையை காக்க வரும் மூன்றாவது கண்

குற்றங்களைத் தடுக்கும் வகையில் தங்களது வீடுகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க : Temple Advisory Committee: கோயில்களில் வசதிகளை மேம்படுத்த ஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.