கோவை வடவள்ளி அடுத்த நவாவூர் பிரிவில் வசித்து வரும் மொகந்தி, தேவி தம்பதியின் மகன் நயன் மொகந்தி. 14 வயதான இவர் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை கடைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு, வெளியேறி சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மினி லாரி சிறுவன் மீது மோதி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றது. விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. சிறுவன் பலத்த காயமடைந்தார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வடவள்ளி காவல் துறையினர், விபத்து நடக்கும்போது பதிவான சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
இதையும் வாசிங்க : கடன் கொடுக்காததால் ஆத்திரம் - தொழிலதிபரை கடத்திய நான்குபேர் கைது