ETV Bharat / state

கோவையில் 496 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Aug 28, 2020, 9:34 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 897ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus
Coronavirus

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்பு இருந்ததைவிட, கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் இன்று (ஆகஸ்ட் 28) 496 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 897ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் ஆறு பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 438 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 237ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க: கரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.