ETV Bharat / state

தென்னிந்தியாவில் கட்டமைப்பு வசதிகளில் கோவை ரயில் நிலையம் முதலிடம்! - coimbatore latest news

இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையில், கட்டமைப்பு, ஆரோக்கியம், ஆற்றல், தண்ணீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் 83/100 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் ‘பிளாட்டினம்’ சான்றிதழ் பெற்ற ஆறாவது ரயில் நிலையமாகவும், தெற்கு ரயில்வேயில் முதலிடம் என்ற பெருமையையும் கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.

கோவை ரயில் நிலையம்
கோவை ரயில் நிலையம்
author img

By

Published : Aug 6, 2021, 11:00 PM IST

சேலம்: சேலம் கோட்ட ரயில் நிலையத்தில், அதிக வருவாய் ஈட்டுவதாக கோவை ரயில் நிலையம் விளங்கி வருகிறது. ஏற்கனவே 'ஏ1’ அந்தஸ்து, ஐ.எஸ்.ஓ தர மேலாண்மைச் சான்றிதழ், சுற்றுச்சூழல், பாதுகாப்பு சான்றிதழ் ஆகியவற்றை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.

மேலும் ‘கிரீன் ரேசியோ’ எனப்படும் பசுமை தர முனைப்பின்படி, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கோவை ரயில் நிலைய வளாகத்தில் சூரியசக்தி, மின்சாரம், மழை நீர் சேகரிப்பு ஆகியவற்றின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்
இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்

பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற ரயில்நிலையம்

அதன்படி ‘மியாவாக்கி’ முறையில் மரம் நடுதல், 100 சதவீதம் எல்.இ.டி விளக்குகள் பொருத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குட்டி பூங்காக்கள் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி தெற்கு ரயில்வே நிலையங்களில் முதல் முறையாக பார்வையற்றோருக்கான ‘பிரெய்லி போர்டு’ இங்குதான் நிறுவப்பட்டது. நோயாளிகள், முதியோர் சென்று வர சாய்வு தளம், லிப்ட், தானியங்கி படிக்கட்டுகள், தாய்ப்பால் ஊட்டுவதற்கென தனி அறை உள்ளிட்ட ஏராளமான சிறப்பு வசதிகள், கோவை ரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையம் பெற்ற பிளாட்டினம் சான்றிதழ்

இந்நிலையில் "இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்" நிறுவன ஆய்வுகளின் அடிப்படையில், பசுமை தரத்துக்கு உரியதாக கருதப்படும் ‘பிளாட்டினம்’ சான்றிதழை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.

தென்னிந்தியாவில் முதலிடம்

கட்டமைப்பு, ஆரோக்கியம், ஆற்றல், தண்ணீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் 83/100 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் ’பிளாட்டினம்’ சான்றிதழ் பெற்ற ஆறாவது ரயில் நிலையமாகவும், தெற்கு ரயில்வேயில் முதலிடம் என்ற பெருமையையும் கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் முதல்முறையாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.