கோயம்புத்தூர்: காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள ஆயுதப்படை தலைமை அலுவலகத்தில், காவலர்களுக்கான 'Room Indervention Drill' பயிற்சி நடைபெற்று வருகிறது. எஸ்.டி.எஃப், சார்பில் நடைபெற்று வரும் பயிற்சியில் காவல் நிலையங்களில் பணிபுரியும் மாநகர காவலர்கள், மற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல் மற்றும் ஆபத்திலிருந்து மீட்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இன்றுடன் மூன்றாவது நாளாக பயிற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை 30 பேர் இந்த பயிற்சியை பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சியில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். தொடர்ந்து காவலர்களை ஊக்கப்படுத்தும், வகையில் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தாமாக முன்வந்து "சி ட்ராஃபிக்" என்ற ஆபத்திலிருந்து மீட்கும் கயிறு இறங்குதலில் ஈடுபட்டார். இது காவலர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பள்ளியில் பொங்கல் விழா - 90’ஸ் கிட்ஸ் விளையாட்டுகளுடன் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்