ETV Bharat / state

"தீபாவளியை முன்னிட்டு கூடுதல் நேரம் கடைகளை திறக்கலாம்" - கோவை மாநகர காவல் ஆணையர் அனுமதி! - காவலர்கள்

Coimbatore Police commissioner speech : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள கடைகளை கூடுதல் நேரத்திற்கு திறக்கலாம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Coimbatore Police commissioner speech
கோவை மாநகர காவல் ஆணையர் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 1:53 PM IST

"தீபாவளியை முன்னிட்டு கூடுதல் நேரம் கடைகளை நடத்தலாம்" - கோவை மாநகர காவல் ஆணையர் அனுமதி!

கோயம்புத்தூர் : ஆயுர்வேத மருந்து குறித்து விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்து செடிகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "முதலமைச்சர் உத்தரவின்படி வாரத்திற்கு ஒருமுறை காவலர்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றோம். தீபாவளி போன்ற முக்கியமான நேரங்களில் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், கடைத் தெருக்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஒரு சில நாட்களில் மட்டும் சில மணி நேரம் காவலர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதனை ஈடுசெய்யும் வகையில் காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். மேலும் கோவை மாநகர போக்குவரத்து காவர்களுக்காக குளிர்சாதன வசதியுடன் மாடர்ன் நிழற்குடை ஒப்பனக்கார வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வசதி மற்ற இடங்களுக்கும் விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

தீபாவளியை முன்னிட்டு கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்களும் சட்டம் ஒழுங்கு காவலர்களும் அதிக அளவில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். பிக் பக்கெட் போன்ற குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் தீபாவளி விற்பனைக்காக இரவில் கூடுதல் நேரம் வேண்டுமானாலும் கடையை திறந்து வைக்க கடை உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை அதற்கான பாதுகாப்பை வழங்கும் என்று கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளோம்.

மேலும், மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு ஓப்பனக்கார வீதியை சுற்றிலும் அதிநவீன முகத்தை துல்லியமாக கண்டறியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், மெட்டா டேட்டா என்ற புதிய தொழில் நுட்பத்துடனான 110 கேமராக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் கூடுதலாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இந்த கேமராக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த நவீன கேமராக்கள் குற்றங்களை தடுப்பதற்கும், தீபாவளி சமயத்தில் பாதுகாப்பாக பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். தீபாவளி அன்றும் கூட்டத்தை கண்காணிப்பதற்காக ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் வீதி ஆகிய இடங்களில் உயர் கோபுர கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளியை பொருத்தவரை கோவை மாநகரில் உள்ள 3 ஆயிரம் காவலர்களும் பணியில் இருப்பார்கள். பிக்பாக்கெட் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக கடைத் தெருக்கள் இருக்கக் கூடிய பகுதிகளில் தனிப்படைகள் அமைக்கப்படும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சிறப்பு ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க: "மழை என்றதுமே வெள்ளம் வருமோ என பதறும் காலம் மாறிவிட்டது" - மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.