கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி கோத்தாரி நகர் பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதைத் தொடந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த 23ஆம் தேதி டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்ததாகவும், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனையில் இவருக்கு கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்ததாகவும் கூறினார்.
மேலும், பாதுகாப்புக் கருதி 14 நாள்களுக்கு இவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளதை மதிக்காமல் துடியலூர் காவல் துறையினர், பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கிவந்தார்.
இதனையடுத்து, இவர் வசித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. தொடர்ந்து, அவர் பயணித்த இடங்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்படவுள்ளன. இவரது உறவினர்கள், இவர் சந்தித்த மருத்துவர்கள், காவல் துறையினரை கரோனா பரிசோதனைக்கும் உட்படுத்த உள்ளனர்.
ஒரு தனிமனிதரின் அலட்சியத்தால் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் பார்க்க: சமூக இடைவெளியைப் பின்பற்றாத மாட்டிறைச்சிக் கடைக்குச் சீல்வைப்பு