கோவை: கோவை மாநகராட்சியில் சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகாள ஒப்பந்ததில் அமல்படுத்த தீர்மானிக்கபட்டு பணிகள் ஆரம்பிக்கபட்டன.
அன்றைய தினம் திமுக தலைமையில் அனைத்து கட்சிகளும் இணைந்து சூயஸ்-ற்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்தது. கோவை நகரத்தின் குடிநீர் விநியோகம் என்பது குடிநீர் வாரியத்தின் மூலமாகவே செயல்பட வேண்டுமே தவிர தனியார் நிறுவனங்களால் செய்யப்பட கூடாது. இந்தியாவிலேயே எந்த நகரத்திலும் இது இல்லை, ஆனால் கோவையில் அதிமுக இந்த ஏற்பாட்டினை செய்தது.
ஆகவே, அதனை ரத்து செய்ய வேண்டும். சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடந்து போராடும்” எனத் தெரிவித்தார்.