கோவையில், நேற்று பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள், 15 பெரியவர்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சின்னராஜ், மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சுஜித் குமார், மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், 'பாதிக்கப்பட்ட பகுதிகள் அய்வு செய்யப்பட்டது, அதில் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து நடத்துள்ளது. மீதமுள்ள சுற்றுச் சுவரையும் இடிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து வட்டாச்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இதற்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
இதையும் படிங்க: மேட்டுப்பாளையம் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!