ETV Bharat / state

எமர்ஜென்சி நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை: முதல்வர் நிர்மலா

கோயம்புத்தூர்: கரோனா காலத்திலும் எமர்ஜென்சி நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 22, 2021, 1:49 AM IST

எமர்ஜென்சி நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறான சூழலில் பிற நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையை பொறுத்தவரை நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 50 என்ற எண்ணிக்கையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கரோனா காலம் என்பதால் அறுவை சிகிச்சை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதாவது தோராயமாக 20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கரோனா காலம் என்பதால் அறுவை சிகிச்சை செய்யும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மிக முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது, "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். மக்கள் பலரும் அரசு கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. முகக்கவசம் அணிந்தாலும் அதனை முறையாக அணிவதில்லை. தகுந்த இடைவெளியும் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதில்லை.

கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை கரோனா நோயாளிகள் மட்டுமல்லாமல் பிற நோயாளிகளையும் கவனித்து வருகிறோம். அறுவை சிகிச்சை மையங்களை பொறுத்தவரை மேல் அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில் சில நாட்கள் சிகிச்சைகளை தள்ளி போடலாம். மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றபடி எமர்ஜென்சி அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து பிரிவு, மகப்பேறு பிரிவு, நரம்பியல் பிரிவு போன்றவற்றில் அறுவை சிகிச்சைகள் தாமதமின்றி நடைபெற்று வருகின்றன. கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மையங்கள் இருப்பதால் இருதய அறுவை சிகிச்சை, தலையில் செய்யப்பட கூடிய அறுவை சிகிச்சைகளுக்கு அண்டை மாவட்டங்களில் இருந்து இங்கு நோயாளிகள் வருகிறார்கள்.

அவர்களிலும் எமர்ஜென்சி நோயாளிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது" என்றார்.

இதையும் படிங்க: கரோனா அறிகுறிகள் தென்படவில்லையா? அலட்சியமாக இருக்காதீர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.