ETV Bharat / state

ஸ்பைடர் மேன் போல் மாடிக்கு மாடி தாவிய கொள்ளையன்.. ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் கோவை துணை ஆணையர் சந்தீஸ் அளித்த பிரேத்யேக தகவல்! - கோவை துணை ஆணையர் சந்தீஸ் பேட்டி

Coimbatore Jos Alukkas jewellery robbery: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது? தற்போது அந்த வழக்கின் நிலை என்ன? என்பது கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரேத்யேக தகவல்

Jos Alukkas jewellery robbery
கோவையில் 500 பவுன் நகை கொள்ளை சம்பவம் அரங்கேரியது எப்படி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 1:54 PM IST

Updated : Dec 2, 2023, 2:03 PM IST

கோவை துணை ஆணையர் சந்தீஸ் பிரத்யேக பேட்டி

கோயம்புத்தூர்: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுமார் 4.600 கிராம் (575 பவுன்) தங்க நகைகள், வைரம், பிளாட்டினம் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் சந்தீஸ் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு, அந்த நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. மேலும் கொள்ளை நடந்த இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் பேருந்து நிலையங்கள் என 400க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பொள்ளாச்சியில் இருந்து பேருந்தில் வந்து, தனி நபராக இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு கிடைத்த கைரேகைகளை கொண்டு விசாரணையில் ஈடுபட்ட போது, அந்த நபர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது கோவை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பல திருட்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

மேலும் தனிப்படை போலீசார் நடத்திய புலன் விசாரணையில், விஜய் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் உள்ள தனது நண்பர் சுரேஷ் என்பவரது வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் பொள்ளாச்சி சென்ற நிலையில், வீட்டில் தங்கியிருந்த விஜய் தகவலறிந்து வீட்டின் மேற்கூரையை பிரித்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் விஜயின் மனைவி நர்மதாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்க நகைகளை மீட்டு, நர்மதாவையும் கைது செய்தனர். தற்போது தப்பியோடிய விஜயை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கொள்ளை வழக்கில் மாநகர காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் தலைமையிலான தனிப்படையினர் சிறப்பாக செயல்பட்டு திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். கோவை துணை ஆணையராக சந்தீஸ் பதவியேற்றதில் இருந்து, இதுபோன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சந்தீஸ்?: ஆந்திரா மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்ட சந்தீஸ், தனது ஐபிஎஸ் பயிற்ச்சிக்கு பின்னர் முதன் முதலாக 2021ல் தூத்துக்குடியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார். அப்போது தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திய ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரி கடத்தல் வழக்கில் திறம்பட செயல்பட்டு கடத்தல் கும்பலை கைது செய்தார். அதேபோல ஆந்திராவில் இருந்து தூத்துக்குடி துறை முகம் வழியாக வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல் கும்பலை கைது செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கோவை மாநகர துணை ஆணையராக பதவியேற்றார். அப்போது கோவை மாநகரில் அதிகளவில் கஞ்சா பொருட்கள் புழக்கத்தில் இருந்த நிலையில், அதனை தனிப்படை மூலம் முற்றிலும் குறைக்க அதிரடி நடவடிக்கை எடுத்து 100க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகளையும், ரவுடிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

குற்றவாளி சிக்கியது எப்படி?: இதுகுறித்து கோவை துணை ஆணையர் சந்தீஸ் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "நகைக் கடையில் இருந்த மிகச்சிறிய சந்து வழியாக மூன்று மாடி கட்டிடத்தில் ஏறி, கண்ணாடி மற்றும் சுவர் மீது கால் வைத்து சுமார் 150 அடி உயரத்திற்கு ஏறி நகைக்கடை உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக 30 கிலோ தங்க நகைகள் இருந்தபோதிலும், வெறும் 4 கிலோ தங்க நகைகளை மட்டுமே தேர்வு செய்து கொள்ளையடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து 400 கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. நகை கடையில் கை ரேகை கிடைத்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் குற்றவாளியை 24 மணி நேரத்தில் அடையாளம் கண்டறிந்தனர். ஏற்கனவே அவர் மீது இரண்டு மூன்று வழக்குகள் உள்ளது. அவை அனைத்தும் சிறிய வழக்குகள். ஆனால் இது மிகப்பெரிய கொள்ளை சம்பவம்.

தற்போது அவரது மனைவியை கைது செய்து, 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முக்கிய குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் நண்பருடைய வீட்டில் தங்கி இருந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். குற்றவாளியை அடையாளம் காண்பதில் மிகவும் சிரமம் இருந்தது. எந்த ஒரு தடையும் கிடைக்கவில்லை முகமூடி அணிந்து கையில் கிளவுஸ் அணிந்ததால் தடயங்கள் எளிதில் கிடைக்கவில்லை.

சுமார் 60 போலீசார் இரவு பகலாக விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளி பல்லியை போல் சுவற்றில் ஏறியுள்ளார். அது மிகவும் ஆபத்தான செயல். அதேபோல போலீசார் செய்து பார்க்க கூட முடியவில்லை, அந்த அளவுக்கு கடினமான செயலாக இருந்தது. இதில் அவர் மிகவும் திறமைசாலியாக இருந்துள்ளார். அதேபோல் வீட்டில் இருந்தும், 15 அடி உயரத்துக்கு சுவற்றில் ஏறி தப்பியுள்ளார். நகை கடையில் ஒவ்வொரு மாடியாக ஸ்பைடர் மேன் போல் தாவி தாவி ஏறி கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றியுள்ளார் என தெரிவித்தார்.

கோவையில் டிசிபியாக பதவியேற்றபின் மேற்கொண்ட நடவடிக்கைகள்: கோவை மாநகர துணை ஆணையராக பதவி ஏற்ற பின்னர், குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை கண்காணித்து வந்தேன். கோவையில் வித்தியாசமான முறையில் குற்றங்கள் நடைபெற்று வந்தது. குறிப்பாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளம் மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது.

இதில் இரண்டு குழுக்களாக கஞ்சா விற்பனை செய்து வந்தனர், அவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டனர். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த கஞ்சா விபரிகளும் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பல்வேறு மாநிலங்களில் சுற்றி வந்த நிலையில், 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தற்போது முக்கிய குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கடந்த 6 மாதங்களில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிசம் குறைந்துள்ளது. கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா பழக்கங்களை ஒழிக்கும் வகையில் 'போலீஸ் ப்ரோ' (Police Pro) என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். அதன் மூலம் கஞ்சா விற்பனை தடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாலையில் தலை தனியாக உடல் தனியாக கிடந்த இளைஞர்.. பொன்னேரி பகீர் சம்பவம்!

Last Updated : Dec 2, 2023, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.