ETV Bharat / state

கோவை மாநகராட்சி பட்ஜெட் காலி பெருங்காய டப்பா போன்றது - அதிமுக கவுன்சிலர்கள் அதிருப்தி!

author img

By

Published : Mar 30, 2022, 10:38 PM IST

கோவை மாநகராட்சி பட்ஜெட் யாருக்கும் உதவாத, மக்களை ஏமாற்றும் பட்ஜெட் எனக் குற்றஞ்சாட்டி பட்ஜெட் மீதான விவாதத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி பட்ஜெட்
கோவை மாநகராட்சி பட்ஜெட்

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது. இந்த பட்ஜெட் கூட்டத்தில் திமுக கூட்டணி கவுன்சிலர்கள் 97 பேரும்; அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா, பிரபாகரன், ரமேஷ் ஆகிய மூன்று பேரும் பங்கேற்றனர்.

முன்னதாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2022-2023ஆம் ஆண்டிற்கான கோவை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனாவிடம் வழங்கினார். கோவை மாநகராட்சியில் இன்று பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சி பட்ஜெட்

கோவை மாநகராட்சியில் மொத்த வருவாய் 2317. 97 கோடி ரூபாய் என்றும் , செலவீனம் 2337.28 கோடி ரூபாய் என்றும், பற்றாக்குறை 19.30 கோடி ரூபாய் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் மாநகராட்சி கூட்ட அரங்கில் மன்ற உறுப்பினர்களைத் தவிர, வெளிநபர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கையை ஏற்று வெளிநபர்களை அலுவலர்கள் வெளியேற்றினர். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீது மேயர் கல்பனா உரையாற்றினார். பட்ஜெட் மீதான விவாதம் மாலை நடைபெறும் எனத் தெரிவித்து மன்றத்தை ஒத்திவைத்தார்.

அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

இதனிடையே இந்த பட்ஜெட் குறித்து 47ஆவது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கூறுகையில், " கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றமளிக்கிறது. புதிய திட்டங்கள் ஏதும் இல்லாத பட்ஜெட்டாக உள்ளது. பெரியார் சொல்வதைப்போல் காலி பெருங்காய டப்பா இந்த பட்ஜெட். இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

அதிமுக இந்த பட்ஜெட்டை முழுமையாக புறக்கணிக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்திற்கு ஏதுமில்லை. கடந்த காலங்களில் உபரியாக இருந்த பட்ஜெட்டை இப்போது பற்றாக்குறையாக கொண்டு வந்து இருக்கின்றனர். இது மக்களை ஏமாற்றும் பட்ஜெட்’ என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.