கோயம்புத்தூர், பச்சாபாளையம் பாலத்துறையைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு சண்முகம் என்ற மகனும், கவிதா என்ற மகளும் உள்ளனர். ஆறுமுகத்திற்கு சொந்தமான 55 சென்ட் விவசாய நிலம் அரிசிபாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ளது. பின்பு, ஆறுமுகம் இறந்துவிட்டதால் அவரது மகனும், மகளும் அந்நிலத்தில் விவசாயம் செய்துவந்தனர்.
இந்நிலையில், 1989ஆம் ஆண்டு அந்த நிலத்ததை இவர்களுக்கு தெரியாமல் நில உடமை பதிவு மேம்பாட்டுத்திட்டதில் அரசு எடுத்துக் கொண்டது. ஆனால் இது தெரியாமல் இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர். சிறிது காலம் கழித்து அரசு அங்கு வேலி அமைத்துள்ளது. இதனையடுத்து ஆறுமுகத்தின் மகன் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் உள்ளிட்டோருக்கு 2010ஆம் ஆண்டில் இருந்து மனு அளித்தார். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதனை அடுத்து மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் ஆர். வாசுதேவன் சிறந்த வாதத்தினை முன்வைத்து இவர்கள் பக்க நியாயத்தை எடுத்துரைத்தார். வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் நீதிபதி, ஆட்சியரின் வாகனம், 10 மேசைகள், 10 கணினிகள், 10 பிரிண்டர்கள், 10 நாற்காலிகள் போன்றவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
இதனையடுத்து ஜப்தி செய்ய வந்த மனுதாரர்களிடம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கால அவகாசம் கேட்டதாக தெரிகின்றது. மாவட்ட நிர்வாகம் கால அவகாசம் கேட்டதன் பேரில் ஜப்தி செய்யாமல் அலுவலர்கள் திரும்பி சென்றனர்.
இதையும் படிங்க : நீலகிரி நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட்...... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு