கோவை மாவட்டத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க 200 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவினை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
பின்னர், அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்களிடம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தத் தனிப்பிரிவிற்கு வருவதற்கும் இங்கிருந்து வெளியில் செல்வதற்கும் பிரத்யேக வழியை ஏற்படுத்தித்தருமாறும், வெளிநபர்கள் யாரும் தனிப்பிரிவிற்குள் நுழையா வண்ணம் கண்காணிக்க பணியாளர்களைப் பணியமர்த்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார்.