கோயம்புத்தூரில் நாளை (ஏப்.26) முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனால் கோவையில் பல்வேறு முக்கிய சாலைகள் மூடப்பட்டன.
இதனையடுத்து கோவை தடாகம் சாலையில் உள்ள கே.என்.ஜி புதூர் பகுதியின் முக்கிய சாலை அடைக்கப்பட்டது. இந்த கே.என்.ஜி புதூர் பகுதியானது கோவை நகர் பகுதியிலிருந்து ஊரக பகுதிக்கு வரும் முக்கிய சாலையாகும்.
அந்தச் சாலை இன்று (ஏப்.25) மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்பட்டதால் கோவை நகர் பகுதிக்கு அத்தியாவசிய பொருள்கள் வாங்க வந்த மக்கள் திரும்பி செல்லும்போது அவதிக்குள்ளாகினர். அதுமட்டுமின்றி இந்த சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ், மருந்துகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்லவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.