ETV Bharat / state

செல்லப்பிள்ளை To முரட்டு கும்கி சின்னத்தம்பி

author img

By

Published : Apr 30, 2022, 10:44 PM IST

Updated : Apr 30, 2022, 10:57 PM IST

கோவையின் செல்லபிள்ளையாக நீங்காத நினைவுகளில் நிறைந்த சின்னத்தம்பியை முரட்டு கும்கியாக மாற்றிய வனத்துறை, முதல்முறையாக காட்டு யானையை கட்டுப்படுத்த களமிறக்கியிருக்கிறது.

coimbatore chinna thambi elephant  chinna thambi  chinna thambi elephant  கும்கி சின்னத்தம்பி  சின்னத்தம்பி யானை  கோயம்புத்தூர் சின்னத்தம்பி யானை  சின்னத்தம்பி
கும்கி சின்னத்தம்பி

சில வருடங்களுக்கு முன்னால் கோவையின் ஹாட் டாப்பிக்காக இருந்தவர் தான் சின்னத்தம்பி.கோவையின் மேற்கு தொடர்ச்சி மலையடிவரங்களில் படுச்சுட்டியாக வலம் வந்தவன் சின்னத்தம்பி. திரைப்படங்களில் பார்க்கும் யானைகளை போல் சுட்டி தனமாக சேட்டைகளை செய்து கொண்டு தன்னனுடைய நிலப்பரப்பில் ராஜாவாக வலம் வந்தான்.

சின்னத்தம்பியின் தோழனாக வலம் வந்தவன் விநாயகன். காட்டு வாழ்க்கையை மட்டுமே விரும்பி வாழ்ந்த விநாயகனுக்கு நேர் எதிராக நகரத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்விடங்கள் தான் சின்னத்தம்பிக்கு பிடித்திருந்தது. அதற்கு ஒரு காரணமும் இருந்தது யாரையும் பயமுறுத்தாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என மேற்கு தொடர்ச்சி மலைகளை வலம் வந்த சின்னத்தம்பிக்கு வாழைப்பழம் பயிர்வகைகளையும் கொடுத்து பழக்கப்படுத்தினர் மக்கள். அவர்களே பின்னாளில் காட்டு உணவு பிடிக்காமல் உணவு தேடி விவசாயப்பகுதிகளுக்கு வரும்போது சின்ன தம்பியை விரட்ட ஆரம்பித்தனர்.

ஆனால் சின்னத்தம்பி யாரையும் இது வரை தாக்கியது கிடையாது மனிதர்களை மட்டுமல்ல ஆடு மாடுகளை கூட தாக்கியதில்லை இதனால் சின்னதம்பிக்கு தடாகம் மருதமலை இப்பகுதிகளில் ரசிகர்கள் ஏராளம். போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருந்தான் சின்னத்தம்பி.

தடாகம் பகுதிகளில் செங்கல் சூளைகள் ஏராளமாக இருந்த பகுதி இதனால் மக்களுக்கு மட்டுமல்ல யானைகளுக்கும் பிரச்சனைதான். தன் கண் முன்னே காணாமல் போன காடுகளால் தனக்கான உணவும் காணாமல் போனதால் விளைநிலங்களில் இறங்கினர் விநாயகனும், சின்னத்தம்பியும் முதலில் மனிதர்களுக்கு தொல்லை என கூறி சின்னத்தம்பியையும் விநாயகனையும் அப்புறப்படுத்த முனைந்தது வனத்துறை.முதலில் விநாயகனை பிடித்து முதுமலைக்கு அனுப்பி வைத்தனர்.

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு வனத்துறையினர் சின்னத்தம்பியை மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். தான் வாழ்ந்த பூர்வீக நிலத்தை விட்டு செல்லமாட்டேன் என அடம்பிடித்த சின்னதம்பியை வாகனத்தில் ஏற்றும் முயற்சியின்போது, பின்னால் இருந்து கும்கி யானை தள்ளியதில் அதன் தந்தங்கள் குத்தி சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. வாகனத்தில் மோதி அதன் ‌2 தந்தங்களும் உடைந்து சின்னதம்பி யானை அவதிப்பட்டு லாரியில் ஏறியதை பார்த்த மக்களால் சின்னத்தம்பிக்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டான் சின்னதம்பி. எல்லையில்லா கானகத்தில் சுதந்திரமாக சுற்றி திரிந்தவனை சொல் பேச்சு கேட்க வைக்க முடியுமா? தன் பூர்வ நிலத்தையும் விநாயகனையும் தேடி திரும்ப வந்தான். விநாயகன் முதுமலை வனப்பகுதிக்கு பழகியதால் திரும்ப வரவில்லை. ஆனால் சின்னத்தம்பியோ ஆனைமலையிலிருந்து தன் நிலத்தை தேடி அலைந்தான் வரும் போது ஏராளமான கட்டிடங்கள், வீடுகள், மனிதர்கள் ஆனால் யாரையும் தொந்தரவு செய்யவில்லை இதன் மூலம் சின்னத்தம்பிகள் தனது தேவையும் பிரச்சனையும் என்ன என புரிய வைத்தான்.

இதை பார்த்த மக்கள் சின்னத்தம்பிக்க்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர் பொது சமூகம் கானகத்து யானைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் முதல் யானையாக சின்னத்தம்பி தான் இருந்திருப்பான். ஆதரவு வலுக்கும் தருணத்தில் தமிழ்நாடு அரசு சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதற்க்கு அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பியின் பயணம், இம்முறையும் ஆனைமலை நோக்கி தான் இருந்தது, ஆனால் காட்டையே பார்க்காத மாதிரி மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டான்.

மூன்று வருட காலம் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தற்போது முதல் முறையாக சின்னத்தம்பியை காட்டுக்குள்ள பார்த்திருக்க! கூண்டுக்குள்ள பார்த்திருக்க! கும்கியா பார்த்திருக்கியா? காட்டு யானைய விரட்டி பார்த்திருக்கியா? என்பது போல் திண்டுக்கல்லில் உள்ள கன்னிவாடி காட்டு பகுதிக்கு முழு கும்கியாக மாறியுள்ள சின்னத்தம்பியை இறக்கி விட்டிருக்கிறது வனத்துறை. கானகத்து யானையாக இல்லை இம்முறை சொல் பேச்சு கேட்கும் கும்கியாக!

இதையும் படிங்க: குப்பையில் உருவான யானை!

Last Updated : Apr 30, 2022, 10:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.