கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஜிஎஸ்டி அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு சோதனை மேற்கொண்டு வந்த அலுவலர்கள் கோயம்புத்தூரில் இயங்கும் எம்.எஸ்.கே அசோசியேடட் டிரேடர்ஸ் என்ற நிறுவனம், போலியான இ-வே பில், இ-வாய்ஸ் ஆகிய ஆவணங்களை தயாரித்ததாகவும் போலி கணக்கு காட்டி அரசு அளிக்கும் சலுகைகளை பெற்றதாகவும் நிறுவன உரிமையாளர் சம்பத்குமாரை கைது செய்துள்ளனர்.
ரூபாய் 2 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தால் கைது செய்ய சட்டம் உள்ள நிலையில், இவர் 7 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததால் பிணையில் வர இயலாது என்றும் அரசு தரப்பு அலுவலர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய டீலர்கள், பயன்பாட்டாளர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 3 மாதங்களில் மீள்வோம்.. கிரெடாய் தலைவர் ஸ்ரீதரன் நம்பிக்கை!