ETV Bharat / state

கோவை அரசு பேருந்தில் தீ விபத்து.. பயணிகள் அலறியடித்து ஓட்டம் - பயணிகள் அலறியடித்து ஓட்டம்

Covai bus Fire accident: சேலத்தில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு துறையினர் பேருந்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Covai bus Fire accident
கோவை அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 6:07 PM IST

Updated : Oct 24, 2023, 7:16 PM IST

கோவை அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து

கோவை: சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி இன்று (அக்.24) வந்தபோது, கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பியுள்ளது. இந்த நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தியுள்ளார்.

அப்போது திடீரென அப்பேருந்தில் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்து கொண்டு கீழே இறங்கிய ஓட்டம் பிடித்தனர். இதனிடையே, அப்பேருந்து மேலும் கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் பேருந்தில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேலத்திலிருந்து கோவைக்கு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் இறங்கியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

சேலத்திலிருந்து கோவை நோக்கி அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் இன்று மதியம் 1.30 க்கு கிளம்பியது. பேருந்தில் 67 பயணிகள் பயணித்தனர். மாலை 4 மணியளவில், கருமத்தம்பட்டி அருகே வந்தபோது, எஞ்ஜீனின் முன்புறம் புகை வருவதை கண்ட ஓட்டுனர் சிவகுமார் மற்றும் நடத்துனர் ராஜா ஆகியோர் சந்தேகமடைந்து பேருந்தை நெடுஞ்சாலை மேம்பாலத்தின் ஓரத்திலேயே நிறுத்தி பேருந்தை சோதனையிட்டுள்ளனர்.

இதனிடையே தீ மளமளவென பரவி, பேருந்து முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. மேலும், அவ்வழியே சென்ற வாகனங்களும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சூலூரிலிருந்து தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர். இருப்பினும் அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக மாறியது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டது - 3 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் சேவை பாதிப்பு!

Last Updated : Oct 24, 2023, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.