ETV Bharat / state

கோவை விமான நிலைய விரிவாக்க ஆலோசனைக் கூட்டம் - kovai Airport Expansion Consultation meeting

கோவையில் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

நடைபெற்றது.
விமான நிலைய ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Mar 10, 2022, 9:59 AM IST

கோயம்புத்தூர்: கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை கூட்டம் அருகில் தனியார் ஹோட்டலில் நேற்று (மார்ச்.9) நடைபெற்றது. இதில் கோவை விமான நிலைய இயக்குநர், செந்தில்வளவன், கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை காவல் ஆணையர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விமான நிலைய ஆலோசனைக் கூட்டம்
விமான நிலைய ஆலோசனைக் கூட்டம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், அதை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம், விமான நிலைய பயணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

விமான நிலைய ஆலோசனைக் கூட்டம்
விமான நிலைய ஆலோசனைக் கூட்டம்

இந்த கூட்டத்தில் விமான நிலைய இயக்குநர் தற்போது விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயல்பாடுகள் குறித்தும் விமான நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள வசதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி பி.ஆர் நடராஜன், "விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகளைக் கட்டுப்படுத்த குப்பை கழிவுகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்துள்ளோம்.

விமான நிலையத்தை மேம்படுத்தவும் பயணிகளைக் கூடுதலாகக் கொண்டு வர அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக முதலைமைசர் ஸ்டாலின் கோவை வருகை தந்தபோது விவரங்கள் தெரிவித்துள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றிக்கனி யார் யாருக்கு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.