கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தனியார் வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இதில் வேளாண்மை இளநிலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 90 நாட்கள் தங்கி விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் இணைந்து விவசாயம் பற்றிய பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் மழை பொழிவு தற்போது அதிகமாக உள்ளதால் இன்று மாணவர்கள் நெல் நாற்று நடவு செய்யும் தொழிலாளர்களுடன் இணைந்து நெல் நாற்று நடவு செய்யும் முறையைக் கற்றுக் கொண்டனர்.
டிராக்டர், காளைகள் மூலம் கலப்பையை பயன்படுத்தி நிலத்தை உழும் முறைகளைப்பற்றி விவசாயிகளிடமிருந்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 90 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி பல்வேறு பயிற்களின் விவசாய முறைகள் பற்றி கற்றுக் கொள்விருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: #Live இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - முடிவுகள் உடனுக்குடன்!