ETV Bharat / state

கோவை வழக்கறிஞர் மோசடி மற்றும் கொலை வழக்கில் தீர்ப்பு - Coimbatore MUrder Case Judgement

கோவை: மோசடி வழக்கில் மனைவியை காப்பாற்ற வேறு ஒரு பெண்ணை கொலை செய்து மனைவி இறந்ததாகக் கூறி இறப்புச் சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அவரது மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை கொலை வழக்கு  கோவை மோசடி வழக்கு  வழக்கறிஞர் ராஜவேல் மோசடி வழக்கு  கோவை 5 வது கூடுதல் நீதிமன்றம்  Coimbatore Murder Case  Coimbatore Fraud Case  Advocate Rajavel Fraud Case  Coimbatore MUrder Case Judgement  Coimbatore Advocate fraud And Murder Case Judgement
Coimbatore MUrder Case Judgement
author img

By

Published : Nov 30, 2020, 6:34 PM IST

கோவை சிவானந்தா காலனியைச் சேர்ந்த அம்மாசை என்ற பெண் 2011ஆம் ஆண்டு காணாமல்போனார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவேல் என்பவரை கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அம்மாசை என்ற பெண்ணை கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜவேல் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலைசெய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், வழக்கறிஞர் ராஜவேலின் மனைவி மோகனா ஒடிசாவில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்திருப்பதும், மோசடி தொடர்பாக ஒடிசாவில் மோகனா மீது ஐந்து வழக்குகள் இருந்த நிலையில் அவரைக் காப்பாற்ற வழக்கறிஞர் ராஜவேல் முயற்சி மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சொத்து விவகாரம் தொடர்பாக தங்களிடம் வந்த அம்மாசை என்ற பெண்ணை தனது உதவியாளர் பழனிச்சாமி, பொன்ராஜ் ஆகியோர் உதவியுடன் வழக்கறிஞர் ராஜவேல் கொலைசெய்தது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் மனைவி மோகனா உயிரிழந்துவிட்டதாக இறந்த அம்மாசையின் உடலைக் காட்டி அனைவரையும் ஏமாற்றி மாநகராட்சியில் இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

அந்த இறப்புச் சான்றிதழை ஒடிசாவில் பயன்படுத்தி தனது மனைவி மீதான வழக்குகளை வழக்கறிஞர் ராஜவேல் முடிவிற்கு கொண்டுவந்துள்ளார். இந்நிலையில், மணிவேல் கொலை தொடர்பான விசாரணையின்போது அம்மாசை கொலைசெய்யப்பட்டது தெரியவரவே காவல் துறையினர் 2013ஆம் ஆண்டு வழக்கறிஞர் ராஜவேலையும் அவரது மனைவி மோகனாவையும் கைதுசெய்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன்

இந்த வழக்கு, கோவை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் ராஜவேல், அவரது மனைவி மோகனாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கார் ஓட்டுநர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முகமது பாருக் தீர்ப்பு வழங்கினார்.

இதனையே நான்காவது குற்றவாளியான பொன்ராஜ் அப்ரூவராக மாறி பிறழ் சாட்சியாக மாறிய நிலையில் தனி வழக்காக விசாரணை நடைபெறும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பண மோசடி வழக்கே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடுக்கப்பட்ட ஒன்றுதான் - செந்தில் பாலாஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.