கோவை மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இந்ந நிலையில் கோவை மாவட்டத்திற்கு இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொள்ள வந்த முதலமைச்சர் ஸ்டாலின், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு தற்பொழுது உள்ள வசதிகள் குறித்து மருத்துவர்கள், செவிலியரிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்திற்கென 50 கோவிட் சிறப்பு அவசர ஊர்திகளை (Covid special Ambulance) திறந்து வைத்தார்.
கரோனா தொற்று உறுதியானவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் நிலையில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டால் அவர்களை அழைத்து வருவதற்கு, இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உயிரிழப்பு பதிவில் பழைய விதியை மாற்ற முதலமைச்சரின் தலையீடு தேவை!