கோயம்புத்தூர்: கோவைக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி மைதானத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ரூ.89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.
இதையடுத்து, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் ரூ.440 கோடியில் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை ஏற்று வழி நடத்தினார்.
முதலமைச்சர் படம் இடம்பெறவில்லை
கோவை நிகழ்ச்சியில், மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி என எந்த தலைவர்களின் படமும் இடம்பெறவில்லை. பின்னர் மேடையில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், "தொண்டர்களின் வரவேற்பு காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக மேடைக்கு வரவேண்டியாயிற்று, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வழிநெடுக வாழ்த்திய நல்லுள்ளங்களின் அன்பு மழையில் நனைந்தவாறே கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ரூ.587.91 கோடி மதிப்பீட்டிலான 70 திட்டப்பணிகளைப் பாசத்திற்குரிய கோவை பகுதிக்கு அர்ப்பணித்து, ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். pic.twitter.com/7I3od5yShM
">வழிநெடுக வாழ்த்திய நல்லுள்ளங்களின் அன்பு மழையில் நனைந்தவாறே கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021
ரூ.587.91 கோடி மதிப்பீட்டிலான 70 திட்டப்பணிகளைப் பாசத்திற்குரிய கோவை பகுதிக்கு அர்ப்பணித்து, ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். pic.twitter.com/7I3od5yShMவழிநெடுக வாழ்த்திய நல்லுள்ளங்களின் அன்பு மழையில் நனைந்தவாறே கோவையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) November 22, 2021
ரூ.587.91 கோடி மதிப்பீட்டிலான 70 திட்டப்பணிகளைப் பாசத்திற்குரிய கோவை பகுதிக்கு அர்ப்பணித்து, ரூ.89.73 கோடி மதிப்பிலான 128 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து மகிழ்ந்தேன். pic.twitter.com/7I3od5yShM
திமுக ஆட்சி இருக்கும் வரை
சட்டப்பேரவை தேர்தலின் போது பெருவாரியான இடங்களில் வென்றிருந்தாலும், கோவையில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் கொளத்தூரில் வென்றவுடன் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்ற போது அளித்த பேட்டியை நினைவு கூறுகிறேன்.
திமுக ஆட்சி இருக்கும் வரை அன்று சொன்னது போல் ஓட்டுப் போடாதவர்களுக்கும் சேர்த்தே உழைப்போம். அந்த எண்ணத்தில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை மாவட்டத்திற்கு நியமித்துள்ளேன்.
ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்தப்பெட்டியைத் திறந்து..
தேரலுக்கு முன்பே மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்று பெட்டியில் பூட்டிய போது அதைச் செயல்படுத்த முடியாது என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் அந்தப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த லட்சக்கணக்கான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செயல்படுத்த முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. கோரிக்கை மனு அளித்தவர்களின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவது
1032 கோடி ரூபாய் கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் 2 நாள்களுக்கு ஒருமுறை சீராகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.
கோவையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை இல்லாத இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்படும். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திடுவது கோவை மாவட்டம்.
ஆட்சியின் நோக்கம்
கோவை மாவட்டத்தில் உள்ள வளர்ச்சி அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வைப்பதே தங்கள் ஆட்சியின் நோக்கம். தான் அதிகம் பேசமாட்டேன், செயல் தான் தன்னுடைய பணி.
நிச்சயமாகக் கோவை மாவட்டம், தமிழ்நாட்டிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்த மாவட்டமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்த முதலமைச்சர்
இந்த இவ்விழாவில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கான இருக்கைகளும் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டு இருந்தது.
ஆனால் பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் மட்டும் வருகை புரிந்தார். இதனையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வானதி சீனிவாசனை மேடைக்கு அழைத்து முன் வரிசையில் அமர வைத்து வாழ்த்துரை வழங்கச் செய்தார்.
உற்சாக வரவேற்பு
முன்னதாக கோவைக்கு வந்த முதல்வருக்கு விமான நிலையம் முதல் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், முத்துசாமி, தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், கயல்விழி, மா. சுப்பிரமணியன், ஏ.வ.வேலு மற்றும் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மாநாடும்... உதயநிதியும்: தடுப்பூசி விவகாரத்தில் குமுறும் தயாரிப்பாளர்!