கோயம்புத்தூர்: Thirukural as a Punishment: மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று (டிச.27) சிறப்புப் பூஜை நடைபெற்றது.
அப்போது ஜமாப் இசைக்கு ஏற்ப இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இது குறித்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரைச் சேர்ந்த 10 இளைஞர்களை மதுக்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
தண்டனை மூலம் வளர்ந்த தமிழ்
உதவி ஆய்வாளர் கவியரசன் தலைமையில் காவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 100 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்துவிட்டு, எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிற்குச் செல்லலாம் என அறிவுறுத்தினர்.
![திருக்குறள் படிக்கும் இளைஞர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-police-thirukural-photo-script-tn10027_28122021123539_2812f_1640675139_617.jpg)
இதையடுத்து இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்து எழுதியதையடுத்து, அனைவருக்கும் காவலர்கள் அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: Central team arrives in Chennai: சென்னை விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினர் ஆய்வு