ETV Bharat / state

கோவை விமான நிலையத்தில் ரூ.69 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்!

கோவை: கொழும்புவிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.69.93 லட்சம் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளை வான் நுண்ணறிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்

Coimbatore airport
author img

By

Published : Oct 11, 2019, 9:52 AM IST

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இலங்கை கொழும்புவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த விமான பயணிகளிடம், வான் நுண்ணறிவு அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அக்பர் அலி, சென்னையைச் சேர்ந்த அன்சரலி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர், ஹைதர் அலி, சாகுல் அமீது, ஹாசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகிய ஏழு பேரின் உடமைகளில் ரூ.69.93 லட்சம் மதிப்புள்ள, 23 ஆயிரத்து 310 சிகரெட் பண்டல்கள் சிக்கியது.

மேலும் அதில், நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. இதனையடுத்து, அவர்களிடமிருந்து சிகரெட் பண்டல்கள் வான் நுண்ணறிவு அலுவலர்களால் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள அழகு சாதன மருந்துகள் பறிமுதல்

Intro:கோவை விமான நிலையத்தின் வழியாக கடத்த முயன்ற ரூ.69.93 லட்சம் மதிப்புள்ள, வெளிநாட்டு சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Body:
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 8-ம் தேதி இலங்கையின் கொழும்புவில் இருந்து ஓர் விமானம் கோவைக்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் பொருட்களை, மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை சேர்ந்த முகமது அக்பர் அலி, சென்னையை சேர்ந்த அன்சரலி, ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டிய பட்டணத்தை சேர்ந்த அப்துல் காதர், ஹைதர் அலி, சாகுல் அமீது மற்றும் ஹாசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகியோரையும், அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்கள் வெளிநாட்டில் இருந்து சிகரெட் பண்டல்கள் கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தன.

அவர்களிடம் இருந்து ரூ.69.93 லட்சம் மதிப்புள்ள, 23 ஆயிரத்து 310 சிகரெட் பண்டல்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பண்டல்களில் மொத்தம் 4 லட்சத்து 66 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரெட்கள் இருந்தன. அவர்களிடம் இந்த சிகரெட்டுகளை கொடுத்து அனுப்பியவர்கள் யார், யாரிடம் ஒப்படைக்க கொண்டு வரப்பட்டது என்பது போன்ற தகவல்களை அதிகாரிகள் விசாரித்தனர். இதை தொடர்ந்து, மத்திய வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முகமது அக்பர் அலி, அன்சரலி, அப்துல் காதிர், களேந்தர் ஹைதர் அலி, சாகுல் அமீது ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
ஹாசன் ரியாஸ், இஸ்மாயில் ஆகியோரிடம் ரூ.20 லட்சம் மதிப்புக்கு குறைவான அளவிலேயே சிகரெட்கள் இருந்ததால் அவர்களிடம் விசாரணை மட்டும் நடத்தினர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.