ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தியன்று ஜெப யாத்திரை: பிரசுரம் விநியோகித்தவர் மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Sep 2, 2021, 9:20 PM IST

விநாயகர் சதுர்த்தியன்று ஜெப யாத்திரை நடத்த வேண்டும் என்று பிரசுரம் விநியோகம் செய்தவர் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என பிரசுரம் விநியோகித்தவர்

கோயம்புத்தூர்: தடாகம் சாலையில் உள்ள செயின்ட் பால் பள்ளி மற்றும் கலை அறிவியல் கல்லூரியை நடத்திவருபவர் டேவிட். இவர் விநாயகர் சதுர்த்தி அன்று ஜெப யாத்திரை நடத்த வேண்டும் எனப் பிரசுரங்களை விநியோகம்செய்துள்ளார். அந்தப் பிரசுரம் பள்ளி நிர்வாக லெட்டர் பேடிலும் அச்சிடப்பட்டிருந்தது.

இது மதக் கலவரத்தைத் தூண்டுவது போன்றுள்ளது எனக் கூறி இந்து முன்னணி அமைப்பினர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் டேவிட்டை துடியலூர் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அவர் மீது சாதி மத இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியைத் தூண்டுதல், உள் நோக்கத்துடன் அவமதித்தல், இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும்விதமாக செயல்படுதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை - இந்து முன்னணியினர் நூதனப் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.