திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை, அப்பகுதியில் விவசாய நிலங்களில் இருந்த விளைபொருட்களை சேதப்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சின்னத்தம்பியை யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
வனம் இருந்த பகுதிகளை எல்லாம் பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடு கட்டியதுதான் இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதற்கிடையே, பல கட்ட முயற்சிகளுக்குப் பின்பு பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. இந்நிலையில், வனத்துறையினரின் அலட்சியத்தால் சரிவர உணவு வழங்கப்படாததாலேயே சின்னத்தம்பி யானை கவலைக்கிடமான நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சின்னத்தம்பி யானைக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.