கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் சுனில்குமார். கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது கோவை விமான நிலையம் அருகே உணவகம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். கடந்த மே 2ஆம் தேதி இவரது பேஸ்புக் பக்கம் மற்றும் சில இணையதளங்களில் சிறுமிகளின் ஆபாச புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதை கண்காணித்த கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவினர் ஐபி முகவரியை கொண்டு இவர் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். பின்னர், அப்பகுதி காவல் நிலையமான செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சுனில் குமாரை விசாரிக்கும்போது அவரது செல்போனில் சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் இருந்துள்ளன. இதனால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவிலும் குறையாத குற்றம் - தனிமைப்படுத்தும் வார்டில் பாலியல் துன்புறுத்தல்