சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஐந்தாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (அக்.10) தொடங்கியது. அதன்படி சென்னையில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆயிரத்து 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரம் சிறப்பு தடுப்பூசி முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று சென்னை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இன்று மாலை 4 மணி நிலவரப்படி 16.84 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ