ETV Bharat / state

சிறுபான்மையினருக்கான அரசு அதிமுக அரசு: முதலமைச்சர் பழனிசாமி! - Chief Ministeri election campaign in Coimbatore

கோயம்புத்தூர்: ஒவ்வொரு மதமும் புனிதமானது, சிறுபான்மையினருக்கான அரசு அதிமுக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு  கோவையில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்  கோவையில் ஜமாத் மக்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி  Chief Minister Palanisamy's press meet in Coimbatore  Chief Ministeri election campaign in Coimbatore  Chief Minister Palanisamy met the people of Jamaat in Coimbatore
Chief Ministeri election campaign in Coimbatore
author img

By

Published : Jan 23, 2021, 6:12 PM IST

கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜமாத் மக்களுடன் முதலமைச்சர் உரையாடினார். அப்போது, ஜமாத் மக்கள் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்கள் வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் பழனிசாமியிடம் அளித்தனர்.

இஸ்லாமியர்களுக்கான திட்டங்கள்

அப்போது முதலமைச்சர் பேசுகையில், "இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். பயணத்திற்கான நிதியை தற்போது 10 கோடியாக உயர்த்தி உள்ளோம். ஒவ்வொரு மதமும் புனிதமானது. என்னை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது.

சிறுபான்மையினருக்கான அரசு

ரமலான், பக்ரீத் பண்டிகைகளுக்கு என் அருமை சகோதரர்கள் அருமையான பிரியாணி செய்து அனுப்புவார்கள். அதை நாங்கள் பகிர்ந்து உண்போம். தமிழ்நாட்டில், வீடு இல்லாத மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் வீடுகள் கட்டிக் கொடுப்போம்.அது எத்தனை கோடிகள், ஆனாலும் வீடு கட்டித் தருவது உறுதி.

ஜெயலலிதா இறந்த பிறகு எவ்வளவோ சோதனைகள் தாண்டி நாங்கள் தற்போது நிற்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம். நாகூர் தர்காவில் இருக்கக்கூடிய குல பராமரிப்பு பணிக்காக 5 கோடியே 37 லட்சம் ரூபாய் உடனடியாக ஒதுக்கி கொடுக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கான அரசு அதிமுக அரசு எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.