கோயம்புத்தூர்: பீளமேடு பகுதியில் பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை வழிமறைத்து தட்டி கேட்ட Swiggy ஊழியரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கினார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர் மாநகர காவலர் ஆணையர்யிடம் புகார் அளித்தார். இந்நிலையில் காவலர் அந்த ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து காவலரை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவலர் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட சித்து மூஸ்வாலா குடும்பத்தினர் அமித் ஷாவுடன் சந்திப்பு!