ETV Bharat / state

இஸ்ரோ உதவியுடன் மாபியா கும்பலை தடுப்போம் -ஜவடேகர்

கோவை: வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரோவின் உதவியால் மாபியா கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

central minister javadegar
author img

By

Published : Aug 24, 2019, 7:03 PM IST

கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் புதிதாக அமைத்துள்ள ஆராய்ச்சி கூடத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார். அப்போது, சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்தியர்கள் இயற்கையை நேசிக்கக் கூடியவர்களாக உள்ளனர். அதற்கு சில அச்சுறுத்தலும் இருந்துவருகிறது. அவை மிக விரைவில் சரிசெய்யப்படும்.

குறிப்பாக 40 மில்லியனாக இருந்த கழுகு இனம் தற்போது 1000ஆக குறைந்துள்ளது. இந்த பிரச்னையில் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. 2021ஆம் ஆண்டு உலக இடம்பெயர் பறவைகள் மாநாட்டை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், மக்களிடையே பறவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனம் அமைக்க நிதி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வன விலங்குகள் ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் வருவது தடுக்கப்படும்.

வனப்பகுதியை ஒட்டிய கனிமவளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம் இதன் மூலம் மாபியா கும்பல் தடுக்கப்படும் என்றார்.

Intro:வனப்பகுதிகளை ஓட்டி இருக்கும் பகுதிகளில் கனிமவளங்கள் சுரண்டப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது எனவும், இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் மாபியா கொள்ளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்Body:
கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆராய்ச்சி கூடத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் தகவல் & ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று திறந்து வைத்தார். பின்னர் சலீம் அலி ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் மிகவும் முக்கிய்ய பணியை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.இந்தியர்கள் இயற்கை நேசிக்கக்கூடியவர்கள் என கூறிய அவர் , அதற்கு சில அச்சுறுத்தல்கள் உள்ளது. அதன் சார்ந்த ஆராய்ச்சியை இந்த மையம் செய்து வருகிறது.
இந்தியாவில்
குறிப்பாக 40 மில்லியனாக இருந்த கழுகு இனம் தற்போது 1000ஆக குறைந்துள்ளது எனவும் தெரிவித்த அவர் இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த பிரச்னையில் கவனம் செலுத்தவும், தீர்வுகளுக்மான வழிமுறைகளுக்கு உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.
2021ல் உலக இடம்பெயர் பறவைகள் மாநாடு இந்தியாவில் நடத்த உள்ளோம் என கூறிய அவர், தற்போது மக்களிடையே பறவைகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர், அழியும் தருவாயில் உள்ள உயிரினங்களை மீட்டெடுக்க பல மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இதுபோன்ற ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

புலியின் பெருக்கத்தை இரட்டிப்பாக்கி உள்ளோம் என கூறிய அவர், 2023க்குள் அதை இரட்டிப்பாக்குவோம் என கூறிய அவர் யானைகளின் எண்ணிக்கை 30,000மாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் மற்றும் தீவனம் அமைக்க நிதி வழங்கப்பட் உள்ளது எனவும் இதன் மூலம் வன விலங்குகள் ஊருக்குள், விவசாய நிலங்களுக்குள் வருவது தடுக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார். மேலும்வனப்பகுதியை ஒட்டிய கனிமவளங்களை சுரண்டுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது எனவும் இஸ்ரோவின் உதவியால் வரைப்படம் மூலம் மணல் எடுப்பதை கண்காணிக்க திட்டமிட்டுள்ளோம்்எனவும் இதன்மூலம், மாபியா கொள்ளை தடுக்கப்படும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.