ETV Bharat / state

'வெளிநாட்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் இருக்கும்' - foreign affairs minister

எதிர்காலங்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெளியுறவுத்துறையின் செயல்பாடுகள் இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/18-June-2022/15582647_chennai.mp4
வெளிநாட்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் இருக்கும் - அமைச்சர் முரளிதரன்
author img

By

Published : Jun 17, 2022, 4:41 PM IST

Updated : Jun 19, 2022, 12:34 PM IST

கோவை: குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 'பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சகாப்தத்தில் இந்திய வெளியுறவுக்கொள்கையின் வெற்றி வரலாறு' என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டனர்.

இதில் மாணவர்களிடையே உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ’வெளியுறவுத்துறை சார்ந்து பாஜக அரசால் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலக அளவில் இந்தியாவின் பெருமை வளர்ந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், ’பல தலைமுறைகளுக்கு முன்னால் வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் தற்போது தங்களையும் இந்தியர்கள் எனக் குறிப்பிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதுவே, எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடாக நான் கருதுகிறேன்.

உக்ரைன் போர்ச் சூழலிலும், ஏமன் நாட்டில் ஏற்பட்ட பதற்றமான காலங்களிலும், கோவிட் காலகட்டத்திலும் வெளிநாடுகளில் தத்தளித்த இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வந்ததில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

வெளிநாட்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் இருக்கும்'

எதிர்காலங்களிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத்துறையின் செயல்பாடுகள் அமையும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவை - சீரடி தனியார் ரயில்: சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் கண்டன ஆர்ப்பாட்டம் ...

Last Updated : Jun 19, 2022, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.