கோயம்புத்தூர்: பந்தய சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், தனியார் தொழில் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று (அக்டோபர் 15) நடைபெற்றது. இதனை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆன்லைன் மூலம் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து காணொலி வாயிலாக ராஜீவ் சந்திரசேகர் பேசினார். அதில், “விஜயதசமி நன்னாளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாடு உலகம் முழுவதும் வேகத்தைப் பெற்றுவருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க செய்ய முக்கியத்துவம் அளித்து தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
திறன் மேம்பாட்டை வலுப்படுத்த ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதியை ஒன்றிய அரசு ஒதுக்குவதுடன், வேலையில்லா இளைஞர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க வெவ்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்திவருகிறது.
திறன் மேம்பாடு சார்ந்து தொடங்கப்படும் நிறுவனங்கள் மாணவர்கள், வேலையில்லா இளைஞர்கள், முன்னதாக திறன் பெற்றவர்களுக்கு மேம்பட்ட திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்றே கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு: தலைவர் பிரச்சினைத் தீருமா?