கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது சோலையாறு அணை. இந்த அணை மொத்தம் 160 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்நிலையில் அணையின் உறுதித்தன்மை குறித்து மத்திய நீர் குழுமம் தலைவர் ஆர்.கே. மெட்டல் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வுசெய்தனர்.
அணையின் உறுதித்தன்மை அதன் கட்டுமான பணிகள், அணையின் மதகு ஷட்டர் போன்ற இடங்களை இந்தக் குழுவினர் ஆய்வுசெய்தனர். உலக வங்கியிடமிருந்து நிதியைப் பெற்று இந்த அணையை மேம்படுத்துவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டு 16 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாகப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதேபோல பரம்பிக்குளம், ஆழியார், அமராவதி போன்ற அணைகளையும் இக்குழுவினர் ஆய்வுசெய்ய உள்ளார்கள்.
இதையும் படிங்க: இடுக்கி அணையில் தொடர் நிலநடுக்கம் - புவியியல் துறையினர் ஆய்வு