கோயம்புத்தூர்: கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு நேற்று (அக் 23) கார் வெடித்து இரண்டாக சிதறியது. இதில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, கோவை சென்று ஆய்வு மேற்கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து கிலோ கணக்கில் ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் இந்த கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. ஜமேஷா, கடந்த 2019ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி, அமலாக்கத்துறை அலுவலர்கள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் உள்பட 5 பேர், சனிக்கிழமை (அக் 22) இரவு 11.25 மணியளவில், அவரது வீட்டில் இருந்து மர்ம மூட்டையை எடுத்துச் சென்றுள்ளனர். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து மூட்டையை எடுத்துச் சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் கார் வெடித்த சம்பவம் - இறந்தவர் யார் என்று துப்புகிடைத்தது