கோயம்புத்தூர்: வால்பாறையில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சில சமயங்களில் பகலிலேயே மக்கள் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் வால்பாறை அடுத்த சோலையார் அணை பகுதியில் உள்ள கிரீன் காட்டேஜில், நள்ளிரவு 2:00 மணியளவில் சிறுத்தை உலாவரும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு ஏதும் ஏற்படாத வகையில் வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிக்குமாறு, பொள்ளாச்சி ஆனைமலை வனவிலங்கு துணை இயக்குனர் சேவியர் ஆரோக்கியராஜிடம் பொதுமக்கள் இன்று (ஆக.7) மனு அளித்தனர்.
தற்போது சிறுத்தை வெளிவரும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருவது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேளாண் நிதிநிலை அறிக்கை - விவசாயிகளின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும்!