தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணி, வசந்தகுமார் ஆகியோரை சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருநாவுக்கரசு உட்பட ஐந்து பேரின் குடும்பத்தினரிடமும் சிபிஐ தீவிர விசாரணையில் ஈடுபட்டது. மேலும் திருநாவுக்கரசு பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல ஆதாரங்கள் சேகரித்து இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்நிலையில், கடத்தல், மானபங்கம், திருட்டு ஆகிய பிரிவுகளில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீதான குற்றப்பத்திரிகையை கோவை நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.