ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சிபிஐ அலுவலர்கள் தீவிர விசாரணை! - தீவிர விசாரணை

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சிபிஐ அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்
author img

By

Published : May 14, 2019, 11:17 PM IST

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரி ராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உத்திரவின்படி, ஏப்ரல் 27ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ அலுவலர்கள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் வீடுகள், அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐ அலுவலர்கள் விசாரணை

இந்நிலையில், திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சிபிஐ அலுவலர் கருணாநிதி தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். மேலும், பண்ணை வீட்டைச்சுற்றி வசிக்கும் மக்களிடமும் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்

 பொள்ளாச்சி -மே -14 
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரி ராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது கோவை மத்திய சிறையில் உள்ளனர், இந் நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்  தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி சிபிஐ காவல்துறைக்கு இந்த வழக்கு ஒப்படைக்கபட்டது, இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் வீடுகள், உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் என அனைவரிடமும் ரகசியமாக அழைத்து தனிதனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று மாணவிகளை  பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படமெடுத்து வீடாக கூறப்படும் சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ அதிகாரியான கருணாநிதி தலைமையிலான நான்கு பேர் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர், வீடியோவில் பதிவாகி உள்ள ஆதாரங்களைக் கொண்டு திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர், மேலும் பண்னை வீட்டைசுற்றி உள்ள வசிக்கும்  மக்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்,4 மணிக்கு திருநாவுக்கரசின் பண்னை வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து இதுவரை ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.