ETV Bharat / state

வங்கிச் சலுகைகளை தவறாக பயன்படுத்திய தனியார் நிறுவன உரிமையாளர் மீது சிபிஐ வழக்கு

author img

By

Published : Mar 12, 2021, 5:45 PM IST

கோவை: வங்கியில் சலுகைகளை பெற்று தவறாகப் பயன்படுத்திய தனியார் ஸ்டீல் நிறுவன உரிமையாளர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

CBI case against private company owner for misusing bank offers

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் ரோஸ்வர் ஸ்டீல்ஸ் என்ற பெயரில் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. ரவிசந்திரன், வாணி,ரகுலன்,சுந்தரராமன் ஆகியோர் இதன் இயக்குநர்களாக இருந்து வந்தனர். இந்த நிறுவனத்திற்காக பெடரல் வங்கியில் கடன் பெற்றுவந்த நிலையில், இயக்குநர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடன் வழங்கபட்டது.

ஆனால், வங்கியில் பெற்ற கடனை முறையாக செலுத்தாமல் இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து சலுகைகளை பெற்று அவற்றை தவறாக பயன்படுத்தி 27.22 கோடி ரூபாய் வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளதும், வங்கியில் இருந்து பெற்ற நிதியை தங்கள் சொந்த நோக்கத்திற்கு மாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்கள் நான்கு பேர் மீது கோவை மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிராந்திய மேலாளர் கோபாலகிருஷ்ணன் ரிசர்வ் வங்கியில் புகார் அளித்தார். இதையடுத்து வங்கிக்கு 27.22 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐயிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ரோஸ்வர் ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு ஊழியர்கள் மீது கூட்டுசதி, மோசடி, உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.