ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மேலும் ஒருவர் கைது - சிபிஐ அதிரடி

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு
author img

By

Published : Aug 13, 2021, 8:05 PM IST

Updated : Aug 13, 2021, 9:52 PM IST

19:59 August 13

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவரைக் கைது செய்து சிபிஐ அலுவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர்: கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியாகி, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்த குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

9 பெண்கள் புகார்

இந்த வழக்கு விசாரணையானது கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், தற்போது வரை 9 பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளித்துள்ளனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அண்மையில் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

சிபிஐயில் ஆள் பற்றாக்குறை

அப்போது சிபிஐ தரப்பில், "ஏற்கெனவே இந்த வழக்கில் கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால், சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருகிறது. சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது" எனப் பதிலளித்தது.

குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும், குறிப்பாக காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்திலான ஒரு அலுவலரை நியமித்து உதவத் தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி நியமனம்

இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழக்கின் விசாரணையை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க, கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, சிபிஐயின் விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி.யான முத்தரசியை நியமித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி கிட்டசூரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவரைக் கைது செய்து சிபிஐ அலுவலர்கள் இன்று (ஆக. 13) மாலை கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 

சிபிஐ அலுவலர்களின் இந்த நடவடிக்கையின் மூலம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2021: நீதி மேலாண்மை!

Last Updated : Aug 13, 2021, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.