கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் "ரஃபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மிக முக்கியமானது.
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் தொடர்பாக மறைத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் விவகார ஊழலில் பிரதமருக்கு பங்கு இருக்கிறது. இதுதொடர்பாக உண்மை வெளிவர வேண்டும். இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் தேர்தல் விதிமுறைகளை மீறி ராணுவ வீரர்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது.
பாஜகவின் தேர்தல் ஆணையம் குழந்தையின் கையில் உள்ள விளையாட்டு பொம்மை போன்றது. சிபிஐ அமைப்பை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி வருகிறது" என்றார்.