ETV Bharat / state

சிறுவாணி அணையில் குறையும் நீர் இருப்பு!

author img

By

Published : May 31, 2019, 2:12 PM IST

கோவை: மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருவதால், 10 நாட்கள் வரை மட்டுமே விநியோகிக்கும் அளவுக்கு நீர் உள்ளது.

siruvani-dam

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் 878.50 மீட்டர் வரை நீரை தேக்க முடியும். அணை கேரளாவில் இருந்தாலும், நீரை அதிகளவில் பயன்படுத்துவது கோவைதான். இங்கிருந்து எடுக்கப்படும் நீர் சாடிவயல் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, வழியோரமுள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் ஏறத்தாழ 23 வார்டுகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்துவருகிறது. அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப, சிறுவாணி அணையில் இருந்து சுத்திகரிப்புக்காக எடுக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டேவருகிறது. தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதால், சில வாரங்களாக தினசரி 60 எம்.எல்.டி. அளவுக்கு மட்டுமே சிறுவாணி அணையில் இருந்து நீர் சுத்திகரிப்பு செய்ய எடுக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'சிறுவாணி அணையில் இருந்து 60 எம்.எல்.டி. நீர் சுத்திகரிப்புக்கு எடுக்கப்பட்டு, வழியோர கிராமங்கள், மாநகர் பகுதிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவது வால்வுகளுக்கு கீழே நீர் மட்டம் சென்றுவிட்டது. இன்னும் ஒரு வால்வு மட்டுமே உள்ளது. இதன் பின்னர் பம்ப் வைத்துதான் தண்ணீர் எடுக்க வேண்டும்.

சிறுவாணி அணை

சிறுவாணி அணையில் தற்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு, ஜீன் மாதம் பாதி வரை விநியோகிக்க முடியும். அதன்பின்னர், அடுத்த பருவமழைக்காலத்தில் தவறாது மழை பெய்தால்தான் அணையில் இருந்து நீர் எடுக்க முடியும்' எனத் தெரிவித்தனர்.

மேலும் 120 அடி கொள்ளளவு உள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளதால் அதிலிருந்து ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் எடுக்க முடியும். இதனால் பில்லூர் குடிநீர் செல்லும் கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

சு.சீனிவாசன்.       கோவை

கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 10 நாட்கள் வரை மட்டுமே விநியோகிக்கும் அளவுக்கு அணையில் நீர் உள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரமாக சிறுவாணி குடிநீர் திட்டம் உள்ளது. சிறுவாணி அணையின் நீராதாரத்தை நம்பி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 863.40 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் 878.50 மீட்டர் வரை நீரை தேக்க முடியும்.

அணை கேரளாவில் இருந்தாலும், நீரை அதிகளவில் பயன்படுத்துவது கோவை தான். சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் சாடிவயல் நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு, வழியோரமுள்ள 22 கிராமங்களுக்கும், மாநகராட்சியின் ஏறத்தாழ 23 வார்டுகளுக்கும் விநியோகிக்கப் படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் மழை எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெய்தது. இதனால் அணை சில முறை நிரம்பியது.நடப்பாண்டில் சிறுவாணி அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப, சிறுவாணி அணையில் இருந்து சுத்திகரிப்புக்காக எடுக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டே வருகிறது. அணை நிரம்பிய சமயத்தில் 100 எம்.எல்.டி அளவுக்கு நீர் சுத்திகரிப்பு செய்ய எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது நீர்மட்டம் குறைந்து வருவதால், கடந்த சில வாரங்களாக தினசரி 60 எம்.எல்.டி அளவுக்கு மட்டுமே சிறுவாணி அணையில் இருந்து நீர் சுத்திகரிப்பு செய்ய எடுக்கப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில் சிறுவாணி அணையில் இருந்து  60 எம்.எல்.டி. எடுக்கப்பட்டு, சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வழியோர கிராமங்கள், மாநகர் பகுதிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 வது வால்வுகளுக்கு கீழே நீர் மட்டம் சென்று விட்டது.இன்னும் ஒரு வால்வு மட்டுமே உள்ளது.இதன் பின்னர் பம்ப் வைத்து தான் தண்ணீர் எடுக்க வேண்டும்.

மழை இல்லாததால், அணையில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. சிறுவாணி அணையில் தற்போது உள்ள நீர் இருப்பை கொண்டு, ஜீன்  மாதம் பாதி வரை வழியோர கிராமங்கள், மாநகர பகுதிகளுக்கு விநியோகிக்க முடியும். அதன்பின்னர், அடுத்த பருவமழைக்காலத்தில் தவறாது மழை பெய்தால் தான் அணையில் இருந்து நீர் எடுக்க முடியும் என தெரிவித்தனர். மேலும் 120 அடி கொள்ளளவு உள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளதால் அதில் இருந்து ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிநீர் எடுக்க முடியும்.இதனால் பில்லூர் குடிநீர் செல்லும் கோவை,திருப்பூர் மாவட்டத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போது துவங்க உள்ள தென்மேற்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் இல்லை என்றால் சென்னையை போன்ற குடிநீர் தட்டுப்பாடு கோவையிலும் ஏற்படும் அபாயம் உள்ளது.

Video in ftp

TN_CBE_1_31_SIRUVANI DAM_VISU_9020856
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.