ETV Bharat / state

கிருஷ்ணசாமி மனைவிக்குக் கரோனா; சொந்த மருத்துவமனைக்குச் சீல்!

கோவை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவிக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டது.

author img

By

Published : Jun 27, 2020, 6:52 PM IST

கோவை:குனியமுத்தூர் பகுதியில் கிருஷணசாமிக்கு சொந்தமான மருத்துவமனையில் நேற்று ஓருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிதள் சீல் வைத்தனர்.

கோவை குனியமுத்துார் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்குச் சொந்தமான சங்கிதா மருத்துவமனை ஒன்று உள்ளது. அதன் நிர்வாகத்தை அவரது மனைவி கவனித்துவரும் நிலையில், நேற்று இரவு சங்கிதா மருத்துவனையில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மருத்துவமனைக்கு சீல் வைப்பு

அவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டு, அவரது இல்லம், மருத்துவமனை செல்லும் பாதை முழுவதையும் சுகாதாரத் துறையினர் அடைத்தனர்.

இதேபோல் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாளர் ஒருவருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அலுவலகத்தின் இரண்டாம் தளம் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, அத்தளத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பெரிய கடைவீதியிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த அங்காடியும் மூடப்பட்டது.

இதையும் படிங்க:காவல் துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் இல்லை: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.