ETV Bharat / state

நம்பிக்கை இல்லாத தீர்மானம் எதன் அடிப்படையிலானது தெரியவில்லை- முதலமைச்சர் - edapadi pazhaniami

கோவை: சபாநாயகர் மீது திமுகவினர் எந்த அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : May 1, 2019, 8:37 PM IST

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்ட எங்கள் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுக, அமமுக இடையே உள்ள நெருக்கம் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. ஸ்டாலின் சபாநாயகர் மீது எதன் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை.

அதேபோல் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால் உளவுத்துறை தேர்தல் ஆணையத்தில் கட்டுபாட்டில் இருப்பதால் தேர்தல் முடிவுகள் தொடர்பான அறிக்கை வெளிவரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சு.சீனிவாசன்.       கோவை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் திமுக, அமமுக இடையேயான நெருக்கம் வெளிப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 4 தொகுதி சட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளில் முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் என தெரிவித்தார்.
சபாநாயகர் மீது எந்த அடிப்படையில் திமுகவினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர் என தெரியவில்லை எனவும், 
3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்தார். இடைத்தேர்தலில்
22 தொகுதிகளிலும் சிறப்பான வெற்றி பெறுவோம் எனவும், தமிழ்நாடு, புதுச்சேரியில்
39 தொகுதி தேர்தல்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் கூறினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உளவுத்துறை இருப்பதால் தேர்தல் முடிவுகள் தொடர்பாக அறிக்கை வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் மூலம்
திமுக, அமமுக இடையேயான நெருக்கம் வெளிவந்துள்ளது எனக்கூறிய அவர், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 3 அதிமுக எம்.எல்.ஏ.மீது நடவடிக்கை எடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். 
தேர்தலுக்கு முன்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டு குடிநீர் பிரச்சனை எங்கும் ஏற்படக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஏனவும், 
அதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.